Tuesday, December 24, 2024
HomeLatest Newsதமிழ் இளைஞனை காதலித்து மணந்த வெளிநாட்டு பெண்: வைரலாகும் புகைப்படம்

தமிழ் இளைஞனை காதலித்து மணந்த வெளிநாட்டு பெண்: வைரலாகும் புகைப்படம்

 தமிழ் மீது இருந்த காதலால் தமிழரை கரம்பிடித்த அமெரிக்க பெண் ஒருவர் வளைகாப்பு கொண்டாடிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

வெளிநாட்டினர் பலருக்கு தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரம் மீது காலம் காலமாகவே ஆர்வம் இருந்து வந்துள்ளது.

இதற்கு சமீபத்திய உதாரணமாக இருப்பவர் அமெரிக்கா பெண்ணான சமந்தா ஜோஸ்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் சமந்தா ஜோஸ் இவருக்கு தமிழ் மொழி மீது பிரியம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக யூடியூப் மூலமாக தமிழ் மொழியை கற்கத் தொடங்கியுள்ளார்.

பின்னர் மெல்ல சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் ஆங்கிலம் கலந்த தமிழான தங்கிலிஷில் பேசி பேசி தனது தமிழ் மொழி அறிவை வளர்த்துள்ளார். அப்போது தான் இவருக்கு தமிழ் இளைஞரான கண்ணன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

நாளடைவில் இருவருக்கும் பிடித்துப் போக திருமணம் செய்ய முடிவெடுத்து 2019ஆம் ஆண்டில் மணம் முடித்துள்ளனர். தனது திருமணத்தை புடவை கட்டி தமிழ் பாரம்பரிய முறையில் நடத்தியுள்ளார்.

தற்போது சமந்தா கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவருக்கு இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

Recent News