உலகில் முதன் முறையாக தாயின் வயிற்றில் இருந்த பொழுது குழந்தை ஒன்றுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள பேடன் ரோக் நகரைச் சேர்ந்தவர் டெரெக்கின் மனைவி கென்யட்டா கோல்மன் கொடிய மரபணுக் நோயினால் பாதிக்கப்பட்டமையால் கர்ப்பமாக கென்யட்டாவின் வயிற்றிலிருந்த குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கென்யட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அவர் கர்ப்பமாகி 34 வாரங்கள் மற்றும் 2 நாட்களுக்குள் 10 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழுவினால் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பிறக்காத அந்த குழந்தையின் மூளையில் வெட்டப்பட்டு, இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் தமனிக்கு அருகில் சுருளை பொருத்துவதற்கு நிபுணர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
வெற்றிகரமாக இந்த சிகிச்சை முடிக்கப்பட்ட பின்னர் பேசிய மருத்துவர்கள், ‘இந்த அணுகுமுறை கேலன் குறைபாட்டின் நரம்புகளை நிர்வகிப்பதில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் குறிக்கும் திறனைக் கொண்டுள்ளது.
பிறப்புக்கு முந்தைய குறைபாட்டை சரி செய்துள்ளதாகவும் மற்றும் பிறந்த பின்னர் அதனை மாற்றுவதற்கு முயற்சிப்பதை விட, இதய செயலிழப்பை ஏற்படுவதற்கு முன்னரே தலைகீழாக மாற்றியுள்ளோம் என கூறியுள்ளனர்.
இதன் மூலம் குழந்தைகளிடையே நீண்டகால மூளை பாதிப்பு, இயலாமை அல்லது இறப்பு அபாயத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த குழந்தை நலமாக பிறந்துள்ளது. இது தொடர்பாக தாய் கென்யட்டா கூறுகையில், ‘அவள் அழுவதை முதல் தடவையாக கேட்டதாகவும், அவளை கேட்டதாகவும் தொடவும் முடிந்ததுடன், அந்த நேரத்தில் பலவாறு உணர்ந்ததாகவும் அதற்கு வார்த்தைகள் இல்லை எனவும் கூறியுள்ளார்.