Tuesday, December 24, 2024
HomeLatest Newsபிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக! ஷெரினாவை வித்தியாசமான முறையில் வெளியேற்றிய கமல்

பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக! ஷெரினாவை வித்தியாசமான முறையில் வெளியேற்றிய கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6ல் ஷெரினா வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

கடந்த சீசன்களை போன்றும் இந்த சீசனை கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார், இதுவரையில் சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை ரசிகர்களே கணித்திருந்தனர்.

இந்த வார நாமினேஷனில் விக்ரமன், அசீம், Vj கதிரவன், ஆயிஷா, ஷெரினா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பிக்பாஸ் தொடங்கி 4 வாரங்களை கடந்த நிலையில், விதிமீறல்கள் அதிகம் நடப்பதாக கமல்ஹாசன் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக ஆயிஷா மற்றும் ஷெரினா மலையாளத்தில் அடிக்கடி பேசிக்கொண்டனர், பிக்பாஸ் இதை சுட்டிக்காட்டியும் தொடர்ந்து அவர்கள் அவ்வாறே செய்து வந்தனர்.

கடந்த வார நாமினேஷனில் ஷெரினா இடம்பெற்றதும், அவர் தான் வெளியேறவிருக்கிறார் என்றே பலரும் கணித்தனர்.

இதன்படி இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற கமலின் கேள்விக்கு பலரும் ஆயிஷாவின் பெயரையும், சிலர் ஷெரினாவின் பெயரையும் தெரிவித்திருந்தன.வித்தியாசமான Elimination Card
இதற்கு விளக்கம் கேட்ட கமல்ஹாசன், நான் தான் வெளியே போவேன் என குறிப்பிட்டார் ஆயிஷா.

காரணம், இந்த வாரம் முழுதும் தான் ஆக்டிவாக இல்லை என்றும், வீட்டுக்கு செல்ல வேண்டும் என நினைப்பதாகவும் குறிப்பிட்டாடர்.

ஷெரினாவோ, விதிகளை மீறியதால் தான் வெளியே செல்வேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து வித்தியாசமான முறையில் மலையாளத்தில் ஷெரினா என்று எழுதப்பட்ட சீட்டை கமல்ஹாசன் காட்டிய பின்னர், தமிழில் எழுதியிருந்த சீட்டை காண்பித்தார்.

பிக்பாஸில் வேற்று மொழியில் எலிமினேஷன் காட் (Elimination Card) காட்டப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

பிற செய்திகள்

Recent News