Wednesday, December 25, 2024
HomeLatest Newsவரலாற்றில் முதல் தடவையாக மகாராணியின் பிரசன்னம் இல்லாமல் பிரதமர் தெரிவு!

வரலாற்றில் முதல் தடவையாக மகாராணியின் பிரசன்னம் இல்லாமல் பிரதமர் தெரிவு!

பிரித்தானியாவின் அரச சட்டங்களின் பிரகாரம் பிரித்தானிய பிரதமரை தேர்வு செய்யும் இறுதி அதிகாரம் மன்னரின் கைகளில் தான் உள்ளது.

இந்த வகையில் எதிர்வரும் வாரத்தில் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பிரதமர் தேர்வில் தற்போதைய 96 வயதுடைய மகாராணி இரண்டாம் எலிசபெத் பங்கு பற்ற மாட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக மகாராணியாரின் பிரசன்னம் இல்லாமல் பிரதமர் தெரிவு நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மகாராணியாரின் வருகை மறுப்பிற்கு இரண்டு பிரதான காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்று, நடைபெறவிருக்கும் பிரதமர் தெரிவானது பிரதமர் ‘பொரிஸ் ஜோண்சனின்’ இராஐனிமாவைத் தொடர்ந்து நடைபெறுவதால் மகாராணியாரின் வருடாந்த நிகழ்ச்சி நாட் காட்டியில் இடம்பெறவில்லை.

இரண்டாவது, காரணம், மகாராணியாரின் உடல் நிலை. 96 வயதான மகாராணியார் தற்போது இயன்றளவு பயணங்களை குறைத்து வருவதாகவும், தற்போது ஸ்கொட்லாந்தில் தனது விடுமுறையை கழித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்படும் வரை பதவியில் தொடர்ந்து நீடித்து வரும் பிரதமர் ‘பொரிஸ் ஜோண்சன்’ எதிர்வரும் வாரத்தில் ஸ்கொட்லாந்தில் இருக்கும் மகாராணியாரை நேரில் சென்று தனது இறுதி பிரியாவிடையை பெறவிருக்கின்றார் என்ற செய்தி சர்வதேச ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றது.

Recent News