Friday, December 27, 2024
HomeLatest Newsலத்தின் அமெரிக்காவில் உணவுத் தட்டுப்பாடு

லத்தின் அமெரிக்காவில் உணவுத் தட்டுப்பாடு

லத்தீன் அமெரிக்காவில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் இதனை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையிலும் மற்றும் ரஷ்ய உக்ரைன் போர் சூழல் உணவு போக்குவரத்தை முற்றிலும் தடை செய்துள்ள காரணத்தினாலும் லத்தின் அமெரிக்காவின் பல மாநிலங்களில் மக்கள் உணவிற்கு போராடும் நிலை உருவாகி வருவதாகவும் இந்நிலைமையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து இல்லாமல் செய்தற்கு ஏற்ற வகையில் உணவு பரிமாற்றங்களை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக உணவுப் பிரிவிற்கு ஐ.நா அறிவுறுத்தியுள்ளது.

Recent News