Friday, December 27, 2024
HomeLatest Newsஅதிகபடியான உணவை சேகரிக்க உணவு வங்கிகள்! புதிய திட்டம் அறிமுகம்

அதிகபடியான உணவை சேகரிக்க உணவு வங்கிகள்! புதிய திட்டம் அறிமுகம்

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து உறுதி திட்ட முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 14,022 கிராமிய சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அப்பகுதிகளில் உள்ள உணவுப் பற்றாக்குறை உள்ள குடும்பங்களுக்கு உள்ளூர் வாசிகளின் அதிகப்படியான உணவை அந்தந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உணவு வங்கிகள் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Recent News