இலங்கை தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், எதிர்வரும் 17ஆம் திகதிவரை இலங்கையின் வடக்கு கிழக்கு வடமத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீப் ராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது.
இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி அளவில் யாழ்ப்பாணத்துக்கு மேலாக நாகப்பட்டினத்திற்கு அண்மையாக இந்தியாவின் தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்படும் காற்றினால், சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும்.
எனினும் நாட்டின் வடக்கு கிழக்கு வடமத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் பரவலான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த மழை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை கிடைக்க சந்தர்ப்பம் உள்ளது. மேற்கூறிய பகுதிகளில் இன்று வியாழக்கிழமை இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திரட்டிய மழையாக 250 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இது வடகிழக்கு பருவ பயிற்சியின் முதலாவது தொகுதி என கருதலாம். ஏற்கனவே கிடைத்து வரும் மழையினால் நீர் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது. இந்தநிலையில் தொடர்ச்சியாக மழை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.
பிற செய்திகள்