Thursday, January 23, 2025
HomeLatest NewsFIFA ஈக்வடோருக்கு முதல் வெற்றி - இன்று மேலும் இரண்டு ஆட்டங்கள்!

FIFA ஈக்வடோருக்கு முதல் வெற்றி – இன்று மேலும் இரண்டு ஆட்டங்கள்!

ஃபீபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் ஈக்வடோர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தியுள்ளது.

ஈக்வடோர் அணி முதல் பாதியில் இருந்தே கத்தாரை முற்றிலுமாக வீழ்த்தி மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

முதல் கோல் தண்ட உதையாக வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது கோலை ஈக்வடோர் வீரர் எனர் வலென்சியா தலையின் மூலம் அடித்தார்.

இதேவேளை, உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று நடைபெறவுள்ளதுடன், செனகல் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் “ஏ” பிரிவின் கீழ் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அதனைத்தொடர்ந்து “பி” பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஈரான் ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News