Monday, December 23, 2024
HomeLatest Newsபுறக்கணிப்பால் மகேஷ்வரியை தாறுமாறாகக் கேட்கும் அசீம்- மீண்டும் கலவர பூமியான பிக்பாஸ் வீடு- முதலாவது ப்ரோமோ

புறக்கணிப்பால் மகேஷ்வரியை தாறுமாறாகக் கேட்கும் அசீம்- மீண்டும் கலவர பூமியான பிக்பாஸ் வீடு- முதலாவது ப்ரோமோ

விஜய் டிவியில் அதிக ரேட்டிங் பெற்று வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசனில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 21 போட்டியாளர்களுடன் துவங்கியது இதில் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே மிச்சம் உள்ளனர்.

இந்த வாரம் அந்த டிவி இந்த டிவி என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு டீமாகப் பிரிந்து போட்டியாளர்கள் பர்ஃபார்ம் செய்து வந்தனர்.அந்த வகையில் நேற்றைய தினம் விக்ரமன் மற்றும் அமுதவாணன் இருவரும் சேர்ந்து செய்த நியூஸ் ரீடர் பொஃபோமன்ஸ் தங்களுக்கு கன்ஃவே ஆகல என்று மகேஷ்வரி அந்த டீமுக்கு 4 புள்ளிகள் மாத்திரமே கொடுத்தார்.

இந்த நிலையில் அசீம் விக்ரமன் மற்றும் அமுதவாணன் பேசியது தனக்கு கேட்டது என்று கூறியதால் மகேஷ்வரிக்கும் அசீமுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்பொழுது வெளியாகியிருக்கும் முதலாவது ப்ரோமோவில் அசீம் உங்க ஜச்மென்ட் பிழை சீரோ தான் என்று கூறுகின்றார். இதனால மகேஷ்வரியும் திரும்ப கத்துகின்றார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Recent News