Wednesday, March 5, 2025
HomeLatest Newsஅனுமதியின்றி தேங்காய் பறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு!

அனுமதியின்றி தேங்காய் பறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு!

நீர்கொழும்பு, கொச்சிக்கடை – ஏத்கால – கேரம் தோட்டப் பகுதியில் அனுமதியின்றி தேங்காய் பறித்த நபரொருவர் மீது காணி உரிமையாளர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் தென்னை தோப்பில் இருந்த குறித்த நபர் மீது, அதன் உரிமையாளர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளாரென தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் துப்பாக்கியுடன் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent News