சிரியாவிலும், ஈராக்கிலும் நிலவி வந்த ஒரு ஸ்திரமற்ற அரசியலினால் 2011-லிருந்து ஐ.எஸ். அமைப்பு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.
சிரியா நாட்டு வீரர்களை ஏற்றிக்கொண்டு சிரியாவின் கிழக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து சிரியா- ஈராக் எல்லைக்கருகே உள்ள டெய்ர் எல்-ஜவுர் பிராந்தியத்திலுள்ள கிழக்கு சிரியாவின் மயதீன் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது இப்பேருந்தை வழிமறித்து திடீரென சூழ்ந்து கொண்ட துப்பாக்கி ஏந்திய கும்பல் அதன் மீது தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் 23 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும், சிரியாவில் இயங்கி வரும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகளுக்கான அமைப்பு தெரிவிக்கிறது.
ஆனால் இது தொடர்பில் சிரியாவின் ராணுவமோ, அரசாங்கமோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.