Monday, January 27, 2025
HomeLatest Newsகொலம்பிய சிலைசாலையில் தீ பரவல்; 51 பேர் பலி!

கொலம்பிய சிலைசாலையில் தீ பரவல்; 51 பேர் பலி!

மேற்கு கொலம்பியாவின் டோலா என்னும் பிரதேசத்தில் உள்ள சிறைச்சாலையொன்றில் திடீரென ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத தீ பரவல் காரணமாக சிறைக் கைதிகள் 51 பேர் மரணித்துள்ளதாகவும், 24 பேர் வரையில் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் கொலம்பிய நீதித்துறை அமைச்சர் வில்சன் ரூயிஸ் தெரிவித்துள்ளார்.

மேற்படி தீ, மின்சார ஒழுக்கினால் ஏற்பட்டிருக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அதற்கான சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகின்றது.

கொலம்பிய சிறைசாலைகள் மேலதிகமான கைதிகளை உள்வாங்கி வைத்திருப்பதும், மிகவும் நெருக்கமான முறையில் கைதிகள் சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவதும் இந்த தீ பரவல்களுக்கு முக்கிய காரணங்களாக அமையக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2020ம் ஆண்டிலும் இதேபோன்று சிறைச்சாலை ஒன்று தீ பற்றியதில் சுமார் 50 பேர் வரையில் மரணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News