22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக ஆரம்பமாகியது.
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது.
லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்நிலையில், உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், ஆர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோதின.
இதில் இரண்டு அணிகளும் 3:3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் காணப்பட்டது.
அதன் பின்னர் பனால்டி கிக் வழங்கப்பட்டது.இதில் 4:2 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா அணி சம்பியன் பட்டம் வென்றது.
இதில் ஆர்ஜென்டீனா அணியின் தலைவர் மெசி 3 கோல்களை விளாசியாமை குறிப்பிடத்தக்கது.