Wednesday, December 25, 2024
HomeLatest Newsஉரம்,எரிபொருள் இலவசம் – அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

உரம்,எரிபொருள் இலவசம் – அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் பருவ காலத்தில் உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்..

பருவகால ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு, உரம் இலவசமாக வழங்கப்படும்.

இயற்கை உரங்களை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஹெக்டேருக்கு 20,000 ரூபா மானியமும் வழங்கப்படும்.

அத்துடன் சீனாவிலிருந்து 10.6 மில்லியன் லிட்டர் எரிபொருளை நன்கொடையாகப் பெற உள்ளோம்.அந்த எரிபொருள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக அவை அறுவடைகாலத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.அனைத்து விவசாயிகளுக்கும் இயற்கை உரங்களை வாங்குவதற்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் விரும்பி வாங்கினால், அந்த நிறுவனத்திற்கு பணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Recent News