Tuesday, March 11, 2025
HomeLatest Newsஇலங்கை விவசாயிகளுக்கு ஈரானிடம் இருந்து உரம்!

இலங்கை விவசாயிகளுக்கு ஈரானிடம் இருந்து உரம்!

இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பை அடுத்து, விவசாய அமைச்சு ஈரானிடம் இருந்து உரத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்தது.

எவ்வாறாயினும் மத்திய கிழக்கு நாடு மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளால் ஈரானில் இருந்து உரத்தை இறக்குமதி செய்வது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தேவையான விண்ணப்பங்கள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recent News