தென்கொரியாவில் 2004 ம் ஆண்டு முதல்பாலியல்.தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது. அதன் பின் பாலியல் தொழிளாளர்கள் பல ஆண்டுகள் மறைவாக வாழ்ந்து வந்தனர். இதேவேளை அவர்கள் மறைவாக இருந்த இடங்களில் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த சந்தேகத்தினால் குறித்த இடத்தை அதிகாரிகள் மூட முயற்சித்தனர்.
இதன் முதற்கட்டமான இவற்றைத் தடுக்க கண்காணப்புக் கமராவைப் பொருத்தினார்கள். சமீபத்தில் யாங்சூகோல் பகுதியில் தன்னார்வ நிறுவனம் விழிப்புணர்வு பேரணிகளை நடாத்தி வரும் நிலையில் அதனை பாலியல் தொழிளாளர்கள் அச்சுறுத்தலாகவே எண்ணுகின்றனர். இப் பேரணிகளின் போது போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.
குறித்த பகுதியில் பாலியல் தொழிலானது 1950 காலப்பகுதியில் ஆரம்பி்கப்பட்டது. கொரிய யுத்த காலப்பகுதியில் அமெரிக்கப் போர் வீரர்கள் இங்கு அடி்கடி.வந்து சென்றனர். இதேவேளை இங்குள்ள பல பெண்களும் பாலியல் தொழிலை நம்பியே உள்ளனர்.
ஆயினும் தற்போது அரசாங்கம் பாலியல் தொழிலை முற்றாக ஒழிப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையி்ல் பாலியல் தொழிலில் ஈடுபடும பெண்கள் அத் தொழிலில் ஈடுபட.மாட்டோம் என்று உடன்படிக்கையி் கைச்சாத்திடுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தமது நிலையைக் கருததிவலடுத்து சிறிது கால அவகாசம் வழங்குமாறு தற்போதும் இத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.