ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் புடினுக்கு எதிராக போட்டியிட பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை எதிர்த்து முன்னாள் தொலைக்காட்சி பத்திரிகையாளர் எகடெரினா டான்ட்சோவா (Yekaterina Duntsova) போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
வேட்பாளராக பதிவு செய்ய எகடெரினா டான்ட்சோவா மூன்று நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். அவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் ‘குறைபாடுகள்’ இருப்பதாகக் கூறி ‘ஆவணப் பிழைகளை’ அந்நாட்டின் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் புடினுக்கு எதிராக போட்டியிட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.