இங்கிலாந்தில் தந்தை மற்றும் மகன் இருவரும் லண்டன் அருகே உள்ள தங்கள் வீட்டில் 10 கோடி மதிப்புள்ள போலி நோட்டுகள்ளை அச்சிட்டு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
இங்கிலாந்தில் தந்தை மற்றும் மகன் இருவரும் லண்டன் அருகே உள்ள தங்கள் வீட்டில், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 கோடி மதிப்புள்ள போலி நோட்டுகள்ளை அச்சிட்டு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். போலிஸாரின் விசாரணையில் குற்றவாளிகள் இருவர் சாதுர்யமாக மேற்கொண்ட கள்ள நோட்டு அச்சடித்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீஸ் விசாரணையில், குற்றவாளிகள் நீண்ட நாட்களாக நாடு முழுவதும் சுற்றித் திரிந்து போலி நோட்டுகளை சப்ளை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இவர்கள் தங்களின் சொந்த வீட்டில் அச்சடித்த பணத்தை வைத்து சாமர்த்தியமாக லட்சக்கணக்கில் வீட்டு செலவுகளை செய்து வந்துள்ளனர்.
இங்கிலாந்தின் ‘தி மிரர்’ செய்தி இணையதளத்தில் வெளியான செய்தியில், தந்தை கிறிஸ்டோபர் கவுண்ட் மற்றும் மகன் ஜோர்டான் கவுன்ட் ஆகியோர் யார்க்ஷயரில் உள்ள ‘பேங்க் ஸ்ட்ரீட்’ என்ற வீட்டில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுக்களை அச்சிட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையின் போது, இருவரும் சேர்ந்து எப்படி போலி நோட்டுகளை அச்சிட்டனர் என்று போலீசார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்தனர். போலி நோட்டுகள் குறித்த தகவல் அம்பலமானதை அடுத்து, ‘வெஸ்ட் யார்க்ஷயர் காவல்துறை’ மற்றும் ‘தேசிய கள்ளநோட்டு ஏஜென்சி’ ஆகியவை இந்த போலி நாணய மோசடியை முறியடிக்க பெரிய நடவடிக்கையை மேற்கொண்டன.
இந்த விவகாரத்தில் தேசிய குற்றப்பிரிவு ஏஜென்சியின் ரகசிய தகவல் கிடைத்ததும், வங்கி தெருவில் உள்ள கிறிஸ்டோபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, சம்பவ இடத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள போலி நோட்டுகள் மற்றும் அவற்றை தயாரிக்கப் பயன்படுத்திய இயந்திரங்களை விசாரணைக் குழுவினர் கண்டுபிடித்தனர். குற்றம் சாட்டப்பட்டவரின் மற்றொரு சொத்தில் இருந்து கரன்சி அச்சடிக்கும் முக்கிய பகுதி மற்றும் போலி நோட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பிரிண்டர் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
இங்கிலாந்து நீதிமன்றத்தில் தந்தை-மகன் இருவரின் விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் தந்தைக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மகனுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தந்தை வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடிப்பதில் கடினமாக உழைத்த நிலையில், மகன் நோட்டுகளை செலவழிக்க வெளியில் சுறுசுறுப்பாக இயங்கி வந்துள்ளான்.