Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsகடல் கடந்து வென்ற தந்தை மகளின் பாசப்போராட்டம்..!உறையும் இணையவாசிகள்..!

கடல் கடந்து வென்ற தந்தை மகளின் பாசப்போராட்டம்..!உறையும் இணையவாசிகள்..!

தந்தை ஒருவர் தனது மகளிற்கு தெரியப்படுத்தாது இந்தியாவில் இருந்து கனடா சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தற்பொழுது இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி அனைவரது மனதையும் கொள்ளை கொண்டு வருகின்றது.

இந்தியாவை சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற மாணவி கனடாவில் வேலை பார்த்து வருகின்றார்.

இந்நிலையில் ஸ்ருத்வா தேசாய்யின், தந்தை தனது மகளுக்கு முற்கூட்டியே தெரிவிக்காது இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முகமாக கனடாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

அங்கு தனது மக்கள் வேலை செய்யும் கடைக்கு வாடிக்கையாளரை போன்று சென்றுள்ளார். அதனை சற்றும் ஊகித்துக் கொள்ளாத ஸ்ருத்வா தேசாய் அதிர்ச்சியடைந்து சிறிது நேரங்கள் தன்னிலை மறந்துள்ளார்.

பின்னர், ஸ்ருத்வா தேசாய் தனது தந்தையை கட்டிப்பிடித்துக் ஆனந்த கண்ணீரில் மூழ்க தந்தையும் மகளை வாரி கட்டியணைத்து கொள்கின்றார்.

இந்நிலையில் தந்தை, மகள் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த காணொளி சங்கு ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள நிலையில், இணையவாசிகள் பலரும் நெகிழ்ச்சியடைந்து தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒரு இணையவாசி , இந்த காட்சி கண்களை ஈரமாக்குவதாகவும், எந்த தந்தையும் தன் மகளை விட்டு பிரிந்து விடக்கூடாது என்று ஆசைப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த காணொளி தற்பொழுது வரை 10.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், சுமார் 2 லட்சம் விருப்பங்களையும் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News