Friday, November 15, 2024
HomeLatest NewsWorld Newsசர்வதேச வேளான் கண்காட்சியில் கோரிக்கையை முன் வைத்த விவசாயிகள் !!!

சர்வதேச வேளான் கண்காட்சியில் கோரிக்கையை முன் வைத்த விவசாயிகள் !!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சர்வதேச வேளான் கண்காட்சி நடைபெற்று வருகிறது .

பிரான்சில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . தங்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக மனம் குமுறும் பிரான்ஸ் விவசாயிகள் , சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டுப்பாடுகள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர் . குறைந்த விலையில் கிடைக்கும் வெளிநாட்டு இறக்குமதிகளை அரசு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் முன் வைத்துள்ளனர்

இந்நிலையில் , விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து , பிரான்சின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கப்ரியேல் அட்டால் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு சலுகைகளை அறிவித்தார் . இதன் காரணமாக , விவசாயிகள் போராட்டம் சில நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் , கடந்த வாரம் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர் . அதன் ஒரு பகுதியாக , பாரிஸ் வேளாண் கண்காட்சியில் திடீரென அத்துமீறி நுழைந்த விவசாயிகள் சிலர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதன் காரணமாக , அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது .

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர் . இதனைத் தொடர்ந்து வேளாண் கண்காட்சியை பார்வையிட்டு , அங்கு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டிருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Recent News