அரசிடம் உரிய அனுமதியை பெற்றுக் கொள்ளாது சொகுசு பங்களாவில் செயற்கை ஏரி அமைத்த பிரபல கால்பந்து வீரர் ஒருவருக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டு கால்பந்து வீரரான நெய்மருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நெய்மர், 7 ஆண்டுகளிற்கு முன்னர் ஹியோ டி ஜெனய்ரோ மாநிலத்தில், கடற்கரைக்கு அருகே இரண்டரை ஏக்கர் பரப்பளவில், ஹெலிபேடு, ஸ்பா, ஜிம் போன்ற பல்வேறுபட்ட வசதிகளுடனான சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் நெய்மர், சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற்றுக் கொள்ளாது செயற்கை ஏரி ஒன்றை அங்கு அமைத்து வருவதாகவும், ஆற்று நீரை ஏரிக்கு மடை மாற்றி விட்டதாகவும் குற்றச்சாட்டு அவர் மீது எழுந்துள்ளது.
அதையடுத்து, 2 வாரங்களுக்கு முன்னர் குறித்த பங்களாவிநாய் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதன் பொழுது, கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அதிகாரிகளை அதனை உடனடியாக தடுத்தும் நிறுத்தியுள்ளனர்.
அதையடுத்து, அந்த வழக்கில் நெய்மருக்கு 27 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.