Monday, January 27, 2025
HomeLatest Newsவில்லங்கத்தில் கொரோனாவை வரவழைத்து கொண்ட பிரபல சீன பாடகி!

வில்லங்கத்தில் கொரோனாவை வரவழைத்து கொண்ட பிரபல சீன பாடகி!

சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பிரபல சீனப் பாடகி தனக்குதானே கொரோனா வைரஸ் பாதிப்பை வரவழைத்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

38 வயதான ஜேன் ஜாங் லியாங்யின் (Jane Zhang Liangyin), சீனாவில் பல்வேறு மேடையில் பாடியுள்ளார். இவரது சமூக வலைத்தளத்தில் 43 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார். அதன்பின் மறுநாள் தனக்கு அனைத்து அறிகுறிகளும் மறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இப்படியொரு பொறுப்பில்லாத செயலை செய்ததாக சீன பாடகிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதையடுத்து அவரது முந்தைய பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.

Recent News