Tuesday, December 24, 2024

ஊர்காவற்துறை கடலில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

இன்று ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் தனது கடற்றொழில் உபகரணங்களை சரிசெய்த பின்னர் கடலுக்கு செல்ல முற்பட்டவேளையே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த நபர் மரணித்த பின்னர், இன்னொரு மீனவர் அவ்விடத்திற்கு வந்து அவரது சடலத்தினை கண்டுள்ளார்.

இதையடுத்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஐஸ்பழ வீதி, குருநகரை சேர்ந்த திரகரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

Latest Videos