Thursday, December 26, 2024
HomeLatest Newsஅத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சரிவு:மக்கள் கவலை!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சரிவு:மக்கள் கவலை!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தற்போது சற்று குறைவடைந்திருந்தாலும், கிராமப் புறங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதுடன் இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னர்.

இந்நிலையில்,எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை அத்தியாவசிய உணவு மொத்த சில்லறை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கிராமப் பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று குறித்த சங்கம் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிடம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, புறக்கோட்டையிலுள்ள மொத்த வியாபாரிகளின் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை நேற்று குறைந்திருந்தது.

ரூ.625 ஆக இருந்த ஒரு கிலோ பருப்பின் மொத்த விற்பனை விலை ரூ.460 ஆக குறைந்துள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் ஒரு கிலோ பருப்பு 600 முதல் 700 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்கப்படுகிறது.

புறக்கோட்டையில் ஒரு கிலோ சீனியின் மொத்த விற்பனை விலையும் நேற்று 12 ரூபாவால் குறைந்துள்ளது. ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 315 ரூபாவாக இருந்த நிலையில் அது 303 ரூபாவாகக் குறைந்துள்ளது. மேலும், அரிசி விலையும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

எரிபொருள் வழங்கினால், புறக்கோட்டையிலுள்ள மொத்த வியாபாரிகளிடம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று கிராமப்புறங்களுக்கு விநியோகிக்க முடியும் என அகில இலங்கை அத்தியாவசிய உணவு மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Recent News