கடந்த 26 நாட்களில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த மார்ச் மாதத்தில் 2 இலட்சத்து 6,500 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை சுமார் 50 வீதம் குறைவடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் நாளாந்த எண்ணிக்கை 3,600 இல் இருந்து 2 ஆயிரமாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானியாவில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் கடந்த ஏப்ரல் மாதம் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் இதுவரை நாட்டுக்கு வருகைத்தந்த சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 41 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான ஹோட்டல் முன்பதிவு நடவடிக்கை சுமார் 50 வீதத்தினால் குறைவடையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல்வேறு விமான நிறுவனங்கள் இலங்கைக்கான பயண செயற்பாடுகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சுற்றுலா சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.