Saturday, January 11, 2025
HomeLatest Newsநாடு முழுவதுமுள்ள சிற்றுணவகங்களின் நடவடிக்கையில் வீழ்ச்சி

நாடு முழுவதுமுள்ள சிற்றுணவகங்களின் நடவடிக்கையில் வீழ்ச்சி

நாடு முழுவதுமுள்ள சிற்றுணவகங்களில், 25 முதல் 30 சதவீதமானவை, எரிவாயு இன்மை காரணமாக, மூடப்பட்டுள்ளதென சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிற்றுணவகங்களின் வர்த்தக நடவடிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் மேலும் பல சிற்றுணவகங்கள் மூடப்படும் நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent News