Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsஇந்தியாவில் பேஸ்புக் தடை செய்யப்படும்...!உயர் நீதிமன்றம் அதிரடி...!

இந்தியாவில் பேஸ்புக் தடை செய்யப்படும்…!உயர் நீதிமன்றம் அதிரடி…!

பேஸ்புக் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டால் நாட்டில் பேஸ்புக்கை தடை செய்ய நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மங்களூரு பிகாரனகட்டேயைச் சேர்ந்த சைலேஷ்குமார் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகின்றார். அவர் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட நிலையில் அவருக்கு மிரட்டல் வந்தமையால் பயந்து தனது கருத்தை நீக்கியுள்ளார்.

இதையடுத்து, மர்ம நபர்கள் அவரது பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கினை ஆரம்பித்து, சவுதி அரேபிய அரசு குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியமையால் சைலேஷ்குமாரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனால்,இது குறித்து மனைவி மங்களூரு பொலிஸாரிடம் புகாரளித்தும் அவர்கள் சரியாக விசாரிக்காமையால் தனது கணவர் பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபரின் தகவல் கேட்டு, பேஸ்புக் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியும் பதில் கிடைக்கவில்லை.

அதையடுத்து, மத்திய அரசின் உதவியை நாடிய போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், 2021 ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தன் கணவரை மீட்பதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததுள்ளது.

அதன் போது நீதிபதி, போலி முகநுால் கணக்கு தொடங்கிய நபர் குறித்த அறிக்கையை ஒரு வாரத்தில் பேஸ்புக் நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வெளிநாட்டு சிறையில் இருக்கும், மனுதாரர் கணவரை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அது மட்டுமன்றி, பேஸ்புக் மூலம் தவறான தகவலை பரப்பினால் இந்தியாவில் பேஸ்புக்கை தடை செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மனு மீதான விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Recent News