Tuesday, December 24, 2024
HomeLatest Newsகடற்கரையில் பேஸ்புக் விருந்து - போதை பொருளுடன் சிக்கிய இளைஞர்கள்

கடற்கரையில் பேஸ்புக் விருந்து – போதை பொருளுடன் சிக்கிய இளைஞர்கள்

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அங்கு போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், வெலிகம, ரணால, திஸ்ஸமஹாராம, கனங்கே, தெலிஜ்ஜவில, வன்சாவல மற்றும் பெலியத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News