Tuesday, December 24, 2024
HomeLatest Newsகொரோனா தடுப்பூசிகளின் காலாவதி திகதி நீடிப்பு!

கொரோனா தடுப்பூசிகளின் காலாவதி திகதி நீடிப்பு!

இந்த மாத இறுதியில் காலாவதியாகவிருந்த கொரோனா தடுப்பூசிகளின் காலாவதி திகதியை ஃபைசர் நிறுவனம் நீடித்துள்ளது.

குறித்த நிறுவனம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் தடுப்பூசிகளின் காலாவதித் திகதி 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 04 வகைகளைச் சேர்ந்த 07 மில்லியனுக்கும் அதிகமான ஃபைசர் தடுப்பூசிகளின் காலாவதி காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

மெழுகும் 03 மாதங்களுக்கு காலாவதி திகதியை நீடித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஜூலை 31ஆம் திகதியுடன் காலாவதியாகவிருந்த இந்தத் தடுப்பு மருந்துகளின் காலாவதித் திகதி ஒக்டோபர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Recent News