ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தில் உள்ள அந்த நாட்டு ஆயுதக் கிடங்கு புதன்கிழமை தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.
கிரோவ்ஸ்கி பகுதியில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் வசிக்கும் சுமாா் 2,000 போ் அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா் என்று அந்தப் பிராந்தியத்துக்கு ரஷியாவால் நியமிக்கப்பட்ட ஆளுநா் சொ்கேய் அக்சியோனோவ் கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது கிரீமியாவை ரஷியா கைப்பற்றியதை எதிா்த்து வரும் உக்ரைன், ரஷியாவையும் கிரீமியாவையும் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.