Saturday, January 18, 2025
HomeLatest Newsகர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்ட காலாவதியான மருந்துகள்! – வெளியான அதிர்ச்சித் தகவல்

கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்ட காலாவதியான மருந்துகள்! – வெளியான அதிர்ச்சித் தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாம் தவணை ஆட்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு காலாவதியான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மாத்திரமன்றி ஒருசில நோயாளிகளுக்கும் வழங்கப்படும் போலிக் ஆசிட் மாத்திரைகள் ( folic acid tablets BP1mg) 55,245 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் காலாவதியாகும் நாளை அண்மித்த நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவை 2013ம் ஆண்டு தொடக்கம் 2016ம் ஆண்டு வரை கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் நோயாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மாத்திரைகளில் நாற்பது இலட்சம் மாத்திரைகள் காலாவதியானவை என்று தெரிய வந்தவுடன் அதனை நோயாளிகளுக்கு விநியோகிப்பதை இடைநிறுத்துமாறு அறிவித்தல் வழங்க முன்னதாக அவற்றில் 98 சதவீதம் மாத்திரைகள் நோயாளிகளால் பயன்படுத்தப்பட்டிருந்தன.

மேற்குறித்த தகவல்கள் பொதுக் கணக்கு தொடர்பான நாடாளுமன்றக் குழுவினால் வௌியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News