Monday, January 27, 2025
HomeLatest Newsசெலவின ஒதுக்கீடு 6 சதவீதத்தால் குறைப்பு - சுகாதாரத்துக்கு மேலதிக நிதி!

செலவின ஒதுக்கீடு 6 சதவீதத்தால் குறைப்பு – சுகாதாரத்துக்கு மேலதிக நிதி!

2023 ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரச செலவு மதிப்பீடுகளில், மீண்டெழும் செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளை 6% வீதத்தால் குறைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட நிதிச் சூழலில் அரச செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், அத்தியாவசியமானதும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருமங்களுக்காக போதியளவு ஒதுக்கீடுகளை உறுதிப்படுத்தும் வகையிலும், 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரச செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மீண்டெழும் செலவின ஒதுக்கீடுகள் குறைக்கப்படவுள்ளன.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recent News