Tuesday, December 24, 2024
HomeLatest Newsரஷ்யா - உக்ரைன் இடையே போர் கைதிகள் பரிமாற்றம்..!வீடு திரும்பிய வீரர்கள்..!

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் கைதிகள் பரிமாற்றம்..!வீடு திரும்பிய வீரர்கள்..!

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடையே போர் கைதிகள் பரிமாற்றம் இடம் பெற்றுள்ள நிலையில் இரு தரப்பில் இருந்தும் சுமார் 45 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் – ரஷ்யா போர் தொடக்கி 17 மாதங்களை கடந்துள்ள சூழலில் இருநாடுகளும் இடையிடையே கைதிகளை பரிமாறி வருகின்றன.

அந்த அடிப்படையில், வியாழக்கிழமை அன்று விடுவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு வீரர்களும், மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களிற்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், இதுவரை ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட 2,576 உக்ரைனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்ய தரப்பில் எத்தனை பேர் விடுக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News