Thursday, January 23, 2025
HomeLatest Newsசனி விட்டாலும் 2023 இல் ராகுவிடாது! அதிக ஆபத்துக்களை சந்திக்கும் ராசிக்காரர்கள்!

சனி விட்டாலும் 2023 இல் ராகுவிடாது! அதிக ஆபத்துக்களை சந்திக்கும் ராசிக்காரர்கள்!

2023 அக்டோபர் 30 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு ராகு செல்கிறார்.ராகு மீன ராசிக்கு செல்வதால் 3 ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி பல்வேறு சிக்கலை கொடுக்கும். குறிப்பாக ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் எதிரிகள் அதிகரிக்கலாம்.

சிம்மம்
கண்டச் சனியாக அமர்ந்திருக்கும் சனிபகவான் விட்டாலும் சிம்ம ராசியினரை ராகு விடமாட்டார்.எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ராகு பெயர்ச்சி காலத்தில் அதிக பணப் பற்றாக்குறையை சந்திப்பீர்கள்.கண்களில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் கடுமையாக பேசுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

2023-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியின் போது மீன ராசியின் முதல் வீட்டிற்கு ராகு செல்கிறார். புத்திசாலித்தனமாக வேலை செய்வது நல்லது.இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை எதற்கும் கட்டாயப்படுத்தாமல், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயலுங்கள்.

Recent News