Tuesday, December 24, 2024
HomeLatest News96 வயதிலும் வீறு நடை..!உலக சாதனை படைத்த மூதாட்டி..!

96 வயதிலும் வீறு நடை..!உலக சாதனை படைத்த மூதாட்டி..!

நடை போட்டியில் 96 வயதான பெண் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளமை அனைவரது கவனத்தையும் திசை திருப்பியுள்ளது.

கனடாவை சேர்ந்த ராஜீனா பயர்ஹெட் என்ற பெண்ணே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார்.

அவர் ஐந்து கிலோ மீற்றர் தூர நடை போட்டியில் கலந்து கொண்டுள்ளதுடன், ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை 51 நிமிடங்கள் மற்றும் 9 செக்கன்களில் நடந்து சாதித்து காட்டியுள்ளார்.

இவ்வாறாக சாதனை புரிந்தது தொடர்பாக ராஜீனா , தம்மை நினைத்து தாமே பெருமிதம் அடைவதாக தெரிவித்துள்ளார்.

இவர் 95 வயது முதல் 99 வயது வரையிலான பிரிவில் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை மிக வேகமாக நடந்து கடந்த உலக சாதனையை ராஜீனா முறியடித்துள்ளார்.

அத்துடன், இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெட்டி லின்ட்பர்க் என்ற பெண் நிலைநாட்டியிருந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளமை பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

Recent News