Sunday, January 26, 2025
HomeLatest Newsரஷ்யா -உக்ரைன் இராணுவ நடவடிக்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்.

ரஷ்யா -உக்ரைன் இராணுவ நடவடிக்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கை காரணமாக இரு தரப்பிலும் பல்வேறு இழப்புக்களை சந்தித்து வருகின்றது.

இந் நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி சமூகவலைத்தளத்தின் மூலமாக உரையாற்றுகையில் ரஷ்யாவிற்கெதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக போராட வருமாறு அழைப்பு விடுத்தார்.

உக்ரைன் அதிபரின் அழைப்பையேற்று ஓய்வுநிலை இராணுவ வீரர்கள் பொதுமக்கள் சினிமாத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் உக்ரைனுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ், ஜெர்மனி,நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, லக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய 7நாடுகளும் தமது நாட்டு மக்களிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட ஏழு ஐரோப்பிய நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின் படி தமது நாட்டு மக்களை உக்ரைனுக் கெதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு போரில் இணைய வேண்டாம். அது நமக்கானது அல்ல என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தியதோடு வினயமான வேண்டுகோளையும் விடுத்திருக்கின்றது என்பது  குறிப்பிடத்தக்கது.

Recent News