Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஇந்திய கடற்படையில் உளவு நடவடிக்கை -கையும் களவுமாக சிக்கிய பாக்கிஸ்தான் உளவாளி..!

இந்திய கடற்படையில் உளவு நடவடிக்கை -கையும் களவுமாக சிக்கிய பாக்கிஸ்தான் உளவாளி..!

ஆந்திராவில் இந்திய கடற்படை தொடர்பான உளவு வழக்கில் பாகிஸ்தான் நாட்டவர் என சந்தேகிக்கப்படும் இருவர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஆகாஷ் சோலங்கி மற்றும் தலைமறைவாக இருந்த பாகிஸ்தான் செயல்பாட்டாளரான மீர் பாலாஜ் கான் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல்துறை ஊழியரான சோலங்கி, இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றிய இரகசிய தகவல்களை ‘அதிதி சவுகான்’ என்ற மாற்றுப்பெயரைப் பயன்படுத்தி பாகிஸ்தான் உளவுத்துறை செயல்பாட்டாளருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

மேலும் அந்த தகவலுக்கு சன்மானமாக பணத்தையும் பெற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Recent News