Saturday, January 11, 2025
HomeLatest Newsசீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள்!

சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள்!

தற்போதைய நெருக்கடிகளிலிருந்து இலங்கை மக்கள் மீள்வதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க, சீன வெளிவிவகார அமைச்சும் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் தீர்மானித்துள்ளன.

இந்த உதவிகளை சீன வெளிவிவகார அமைச்சும் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் ஒன்றிணைந்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாகவும், வழங்கப்படும் உதவிகள் குறித்த தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Recent News