ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதன் பின்னர் அதில் பல்வேறு மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டார்.
ட்விட்டரை வாங்கியவுடன் முதலில் டுவிட்டரின் முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். பின்னர் ஆலோசனைக் குழுவினையும் நீக்கினார்.
அதனைத் தொடர்ந்து புளூ டிக் சலுகை பெற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்ததுடன் twitter வார்த்தை வரம்புகளையும் அதிகரித்தார்.
அதில் ஆட்குறைப்பு, ‘ப்ளூடிக்’ வசதிக்கு கட்டணம் போன்ற முடிவுகள் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய வேளையிலும் மஸ்க் அதிலிருந்து பின்வாங்கவில்லை.
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் திட்டங்கள் பற்றிய அறிவிப்பை இரவு நேரத்திலோ அல்லது அதிகாலை சமயங்களிலோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே அவரே சிஇஓ வாகவும் இருந்து வருகின்றார். இந்நிலையில், எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதிய பெண் சிடிஓ ஒருவரை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவர் எனவும் கூறியுள்ளார்.
மேலும், நிர்வாகத் தலைவர் மற்றும் சிடிஓ ஆக எனது பங்களிப்பு மாறும் எனவும் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு இவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் சிஇஓ யார் என்பதை அறிய மில்லியன் கணக்கான ட்விட்டர் பயனாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.