Thursday, January 23, 2025
HomeLatest Newsஎலான் மஸ்க்கின் மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி ஆய்வு செய்ய அனுமதி...!

எலான் மஸ்க்கின் மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி ஆய்வு செய்ய அனுமதி…!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி கம்பியூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினரின் (FDA) அனுமதி கிடைத்துள்ளது.

இதனை அடுத்து, எலோன் மஸ்க் விரைவில் மனித மூளையில் ஸ்மார்ட் சிப்களை பொருத்தி வராலாற்று சிறப்பு மிக்க ஆராய்ச்சியைத் தொடர முடியும். மனித மூளையில் பொருத்தப்பட்ட நியூராலிங்க் சாதனத்தின் தாக்கத்தை எலான் மஸ்க் தற்போது ஆய்வு செய்ய முடியும்.

இதேவேளை “எங்கள் முதல் மனித மருத்துவ ஆய்வைத் தொடங்க FDA இன் ஒப்புதலைப் பெற்றுள்ளோம் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று நியூராலிங்க் ட்வீட் செய்துள்ளார்.

இது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் நியூராலிங்க் குழு மேற்கொண்ட பணியின் விளைவாகும். மேலும் ஒரு நாள் தமது தொழில்நுட்பம் பலருக்கு உதவிடும் வகையில் வளர்ச்சி பெறுவதற்கான ஒரு முக்கியமான முதல் படியாக அமையும் என்று நியூராலிங்க் நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

Recent News