Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஎலான் மஸ்க் அதிரடி அறிவுப்பு - மாறப்போகும் டுவிட்டர் தளம்..!

எலான் மஸ்க் அதிரடி அறிவுப்பு – மாறப்போகும் டுவிட்டர் தளம்..!

பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியான லிண்டா, டுவிட்டரை வாங்கியது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் எலான் மஸ்க் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “விரைவில் நாங்கள் டுவிட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக லோகோவில் உள்ள அனைத்து பறவைகளுக்கும் விடை கொடுக்கலாம்.

நல்ல போதுமான எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியிடப்பட்டால் அதனுடன் நாளை உலகம் முழுவதும் வருவோம் என்று கூறியுள்ளார்.

டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்பட்டு வர்த்தக குறியீடாக உள்ள டுவிட்டர் என்ற பெயருக்கும் லோகோகும் விரைவில் விடை கொடுக்கலாம் என்று எலான் மஸ்க் கூறியிருப்பது டுவிட்டர் பயனர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


அவர் எக்ஸ்.ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News