Thursday, January 23, 2025
HomeLatest Newsபயனாளர்களை கட்டுப்படுத்தும் எலோன் மஸ்க்..!எழுந்துள்ள குற்றச்சாட்டு..!

பயனாளர்களை கட்டுப்படுத்தும் எலோன் மஸ்க்..!எழுந்துள்ள குற்றச்சாட்டு..!

டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க், பயனாளர்களை கட்டுப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது, டுவிட்டர் தொடர்பில் வெளியாகிய புதிய திருத்தங்கள் தொடர்பாக அவர், பயனாளர்களை கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

டுவிட்டர் நிறுவனம் அதன் பயனாளர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களைப் படிக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சரிபார்க்கப்படாத பயனாளர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ட்வீட்களையும், சரிபார்க்கப்பட்ட பயனாளர்கள் 10 ஆயிரம் ட்வீட்களையும் படிக்க முடியும் என்று டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில், எலோன் மஸ்க் ஒரு சமூக ஊடக நிறுவனத்திற்குள் புரிந்து கொள்ள முடியாத ஒன்றைச் செய்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன்,மஸ்க் பயனாளர்களின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News