Thursday, January 23, 2025
HomeLatest Newsமிகப்பெரும் இழப்பை சந்தித்த எலோன் மஸ்க்!

மிகப்பெரும் இழப்பை சந்தித்த எலோன் மஸ்க்!

உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலோன் மஸ்க் தமது சொத்து மதிப்பில் 200 பில்லியன் டொலரை இழந்திருக்கிறார்.

இந்நிலையில் பணத்தை இழந்துள்ள உலகின் முதல் நபர் அவராகும். Amazon நிறுவனர் ஜெஃப் பேஸோஸிற்கு (Jeff Bezos) அடுத்து 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துகளுக்குச் சொந்தக்காரரான உலகின் 2ஆவது நபர் மஸ்க்காகும்.

Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அவரின் சொத்து மதிப்பு 137 பில்லியன் டொலருக்குச் சரிந்திருப்பதாக Bloomberg Billionaires Index தெரிவித்தது.

அதேவேளை 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி அவரின் சொத்து மதிப்பு 340 பில்லியன் டொலராக இருந்ததுடன் அவரே உலகின் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்.

ஆனால் தற்போது ஆடம்பரப் பொருள் விற்பனைக் குழுமம் LVMHஇன் தலைமை நிர்வாகி பெர்னட் அர்னால்ட் (Bernard Arnault) முதல்நிலைப் பணக்காரர் என்ற இடத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

Tesla பங்கு விலைகள் சரிந்ததும் Twitter நிறுவனத்தை வாங்குவதற்காக மஸ்க் தமது பங்குகளை விற்றதும் அவரின் சொத்து மதிப்பைப் பாதித்திருப்பதாக Bloomberg செய்தி நிறுவனம் கூறியது.

Recent News