Tuesday, December 24, 2024
HomeLatest Newsமகப்பேற்று விடுமுறைக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்..!

மகப்பேற்று விடுமுறைக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்..!

டுவிட்டர் நிறுவனத்தில் பனி புரியும் ஊழியர்களின் மகப்பேற்று கால விடுமுறையை 14 நாட்கள் குறைத்து அதன் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதை தொடர்ந்து அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், அதிகமான ஊழியர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.

இவ்வாறான சூழலிலே, குழந்தை பிறந்த பின்னர் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பெற்றோர் விடுப்பு 20 வாரங்களை 2 வாரங்களாக அதாவது 140 நாட்களில் இருந்து 14 நாட்களாக விடுமுறை குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக டுவிட்டரின் பயனர்களின் சிலர், “டுவிட்டரில் இது அவமானம் என்றும் இரண்டு வாரங்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு? இது சரியான வழி இல்லை” என்றும் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலர் “இது குழந்தைகளை பெறாமல் இருக்கும் உங்கள் ஊழியர்களையே ஊக்குவிக்கும்” என்று கூறியுள்ளனர்.

Recent News