Tuesday, December 24, 2024
HomeLatest Newsடுவிட்டரில் தனது பெயரை மாற்றிய எலான் மஸ்க்!

டுவிட்டரில் தனது பெயரை மாற்றிய எலான் மஸ்க்!

டுவிட்டர் சமூக வலைதளத்தில் தனது பெயரை மிஸ்டர் டுவீட் என மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இவர் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தற்போது செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் தனது பெயரை அவ்வப்போது மாற்றும் வழக்கத்தை கொண்டவர் மஸ்க். அந்த வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இதனை அவரே டுவீட் மூலம் தெரிவித்துள்ளார். இனி தானே நினைத்தாலும் அந்தப் பெயரை மாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இது டுவிட்டர் நிறுவனத்தை அவர் வாங்கிய காரணத்தால் கொண்டு வரப்பட்ட மாற்றம் அல்ல. டுவிட்டர் தளத்தில் தனது நேரத்தை அதிகம் செலவிட்டு வருபவர் மஸ்க். அதை கருத்தில் கொண்டே இந்த பெயர் அவருக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recent News