ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரும் உலக அளவில் நம்பர் 1 பணக்காரருமான எலான் மஸ்க்குக்கும், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்குக்கும் இடையே நிஜமான சண்டை உறுதியாகியுள்ளது.
இந்த சண்டை ட்விட்டரில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இன்றைய தேதிக்கு உலக அளவில் மிகப்பெரிய சமூக வலைதளங்களாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவையே விளங்குகின்றன. இவற்றில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தி நடத்தி வருகிறார்.
அதேபோல, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களை மார்க் ஜுக்கர்பெர்க் நிர்வகித்து வருகிறார்.
இந்த சூழலில், சமீபகாலமாக எலான் மஸ்க் – மார்க் ஜுக்கர்பெர்க் இடையே வார்த்தை மோதல் அடிக்கடி ஏற்பட்டு, அரசியல் விவகாரங்கள் தொடங்கி ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்த கலந்துரையாடல் வரை அவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்து வந்த சூழலில், கடந்த மாதம் இதேபோல் இருவருக்கும் இடையே மோதல் வெடிக்க, தன்னுடன் நேருக்கு நேர் மோத தயாரா என மார்க் ஜுக்கர்பெர்கிடம் எலான் மஸ்க் சவால் விடுத்தார்.
இந்த சவாலை மார்க்கும் ஏற்றுக் கொண்டார்.இதன் தொடர்ச்சியாக, இருவரும் தனித்தனி சண்டை பயிற்சியாளர்களிடம் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சண்டையை உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.