Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை...!

ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை…!

ஈழத் தமிழ் மாணவன் ஒருவன் சர்வதேச அரங்கில் சாதனை படைத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் புதல்வனான அர்ச்சிகன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள விண்வெளி குறித்த நிறுவனமான அமெரிக்காவில் உள்ள விண்வெளி குறித்த நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடாத்திய போட்டியில் வெற்றி பெற்று ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NSS அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26 725 பேர் பங்கேற்ற நிலையில், ஈழத்தமிழ் மாணவனான அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்துள்ளதுடன் வெற்றியாளராகவும் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இந்த மாதம் இடம்பெறவுள்ள அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப்பட்டிருப்பதுடன், அங்கு உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.

இம் மாணவனின் சாதனை எந்த சூழ்நிலையிலும் சாதிக்க முடியும் என்பதை எடுத்து காட்டுவதால்
உலகம் முழுவதும் வாழும் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்திலிருந்து அகதியாக தத்தளித்து வலிகளை மட்டுமே சுமந்து கொண்டு சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News