எட்டு யூடியூப் தளங்களை இந்திய மத்திய அரசு இன்று முடக்கியது.
இந்நிலையில் முடக்கப்பட்ட யூடியூப் தளங்கள், 114 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், 85.73 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளது.
அதன் உள்ளடக்கம் ஊடாக பணமும் ஈட்டப்பட்டு வந்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், 2021 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கமைய, ஏழு இந்திய யூடியூப் செய்தி தளங்களும், ஒரு பாகிஸ்தான் செய்தித்தளமும் முடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ,தடைசெய்யப்பட்ட யூடியூப் சேனல்கள், இந்திய அரசால் மதக் கட்டமைப்புகளை சிதைத்தல், இந்தியாவில் மதப் போரைப் பிரகடனம் செய்தல் போன்ற பொய்யானதகவல்களை வெளியிட்டுவந்துள்ளதாக விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
இந்திய ஆயுதப் படைகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற பல்வேறு விடயங்களில் போலி செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“தேசிய பாதுகாப்பு மற்றும் வெளி மாநிலங்களுடனான இந்தியாவின் நட்புறவு ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் உள்ளடக்கம் முற்றிலும் தவறானது” என்றும் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.