Sunday, January 26, 2025
HomeLatest Newsமலேசியாவுக்கு ஆவணங்களின்றி வெளிநாட்டவர்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு! 

மலேசியாவுக்கு ஆவணங்களின்றி வெளிநாட்டவர்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு! 

தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை கடத்தும் மனித கடத்தல் கும்பலின் முயற்சியினை மலேசிய குடிவரவுத்துறை முறியடித்துள்ளது. 

மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குள் பேருந்து வழியாக வந்த 5 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் வந்த 47 வயது கம்போடிய நாட்டவரும் கைது செய்யப்பட்டார். இவர் கடத்தல் முகவராக செயல்பட்டதாக கூறப்படுகிறது.  

“முகவர் ஒருவர் 5 சட்டவிரோத குடியேறிகளை அழைத்து வருவதாக எங்களுக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஷா அலம் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் மலேசியாவுக்குள் மனித கடத்தல்காரர்களின் ஏற்பாட்டில் நுழைந்த 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்,” என மலேசிய குடிவரவுத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மலேசியாவுக்குள் நுழைவதற்காக கடத்தல்காரர்களுக்கு ஒரு நபருக்கு சுமார் 5,000 முதல் 6,000 மலேசிய ரிங்கட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

Recent News