Tuesday, December 24, 2024
HomeLatest News18 குடும்பங்களின் வாழ்விற்கு ஒளியூட்டிய ஈழத் தமிழன்!

18 குடும்பங்களின் வாழ்விற்கு ஒளியூட்டிய ஈழத் தமிழன்!

இராஜேஸ்வரி அறக்கட்டளை ஊடாக இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 18 குடும்பங்களுக்கு நவீன வீடுகள் அமைத்து கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறவுள்ளது.

இத்திட்டத்திற்கான நிதியுதவி முற்றுமுழுதாக ஒரு தனிநபரின் முயற்சியால் அமையப்பெற்றது.

இராஜேஸ்வரி அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளரும், இராஜேஸ்வரி திருமண மண்டபம் மற்றும் இன்னும் பல வணிக துறைகளில் தடம்பதித்தவருமான செல்லத்துரை திருமாறனின் தனி முயற்சி மற்றும் சிந்தனையில் 18 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், கோண்டாவில், அச்செழு,திருகோணமலை, ஆகிய இடங்களில் வசிக்கும் 18 குடும்பங்களுக்கு குறித்த வீடுகள் சகல வசதிகளுடனும் அமைத்து கொடுக்கப்படவுள்ளது.

மேற்படி இத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வருடம் ஆரம்பமாகிய நிலையில் கட்டுமானப் பணிகள் யாவும் இம்மாதம் நிறைவுபெற்று உரிய பயனாளிகளுக்கு சகல வசதிகளுடனும் குறித்த 18 வீடுகளும் கையளிக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லத்துரை திருமாறன்.கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் இவருடைய சிந்தனை மற்றும் உழைப்பையும் ஒன்றுசேர்த்து அமையப்பெற்றதே இந்த இராஜேஸ்வரி அன்புச்சோலை.

Recent News